சூரத்-சாப்ரா விரைவு ரயில் தடம் புரண்டது: ரயில் போக்குவரத்து பாதிப்பு

பீகார் மாநிலம் சாப்ரா அருகே சூரத்-சாப்ரா விரைவு ரயில் தடம் புரண்டதால் அந்த பகுதி வழியாக செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

நேற்றிரவு சூரத்-சாப்ரா ரயிலின் 14 பெட்டிகள் கவுதம்ஸ்தான் ரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை என்ற போதிலும் பயணிகள் ஒருசிலர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் தடம் புரண்ட பெட்டிகளை மீட்க மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரயில்பாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்3

Leave a Reply