சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டநிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு விஜயகாந்த் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

தொடர்ந்து கலை சேவையில் ஈடுபட்டு பல உயரிய விருதுகளை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் ரஜினிகாந்துடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *