சூப்பர் டீலக்ஸ்: சமந்தா நடிப்பை பாராட்டிய நியூயார்க் டைம்ஸ்

சூப்பர் டீலக்ஸ்: சமந்தா நடிப்பை பாராட்டிய நியூயார்க் டைம்ஸ்

நேற்று வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருசில ஊடகங்கள் இந்த படம் சூப்பர் என்றும், ஒருசில ஊடகங்கள் சுமார் என்றும் விமர்சனம் செய்திருந்தாலும் அனைத்து தரப்பின் பாராட்டுக்களை பெற்றது சமந்தா மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பு

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ், சமந்தாவின் நடிப்பையும் அவரது கேரக்டரையும் பாராட்டியுள்ளது. விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தாலும் சமந்தா இந்த கேரக்டரை துணிச்சலாக ஏற்று நடித்ததற்காக நியூயார்க் டைம்ஸ் அவரை பாராட்டியுள்ளது

இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூ.45 லட்சம் வசூல் செய்துள்ளது. இன்றும் நாளையும் சேர்த்து ரூ.1 கோடி வசூலை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.