shadow

சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா

தேவையான பொருட்கள் :

மீன் – 12 துண்டுகள்,
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1½ டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1½ டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
தந்தூரி மசாலா பவுடர் – 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
கிராம்பு – 2,
பட்டை – 1 துண்டு,
ஏலக்காய் – 2,
முந்திரி – 20 கிராம்,
தக்காளி – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
காய்ந்த வெந்தய இலை – 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது.

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன், பாதியளவு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், தந்தூரி மசாலா பவுடர், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போடடு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், முந்திரி, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த வெங்காயம், தக்காளி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அதில் மீதியுள்ள மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து, காய்ந்த வெந்தய இலையை சேர்த்து கொதிக்க விடவும்.

* தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

* சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா ரெடி.

Leave a Reply