shadow

சுவையான செஃப் சமையல்! – சோள வடை

என்னென்ன தேவை?

இனிப்புச் சோளம் – 2 கப்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு, சோள மாவு – தலா 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

சீரகத் தூள், மிளகுத் தூள் – 1 சிட்டிகை

சோம்பு – 1 டீஸ்பூன்

உப்பு , கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

இனிப்புச் சோளத்தைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழது, சீரகத் தூள், மிளகுத் தூள், சோம்பு, உப்பு, கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறினால் அமிர்தமாக இருக்கும்!

Leave a Reply