சுர்ஜித்துக்காக 8 கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டம் இல்லை!

சுர்ஜித்துக்காக 8 கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டம் இல்லை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவனை உயிருடன் காப்பாற்ற கடந்த பல மணி நேரமாக மீட்புப்படையினர் போராடி வரும் நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் சுர்ஜித் மீட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டு வந்த நிலையி நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தீபாவளி கொண்டாடவில்லை. யாரும் பட்டாசு வெடிக்கவில்லை, புதிய ஆடை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் சுர்ஜித் மீட்கப்பட செய்து வரும் மீட்புபணி நடந்து வரும் இடத்தில் உள்ளனர்.

மேலும் தமிழகமெங்கும் சுர்ஜித்தை மீட்க அனைத்து மத வழிபாட்டுத்தலங்களில் பிரார்த்தனை நடந்து வருகிறது. லட்சக்கணக்கானோர்களின் பிரார்த்தனை பலித்து சுர்ஜித் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் உள்ளது

Leave a Reply