சுபஸ்ரீ சர்ச்சை பேச்சை அடுத்து வெளிநாடு கிளம்பிய விஜய்!

சுபஸ்ரீ சர்ச்சை பேச்சை அடுத்து வெளிநாடு கிளம்பிய விஜய்!

நேற்று முன் தினம் நடைபெற்ற ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய், சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் மரணம் அடைந்த சுபஸ்ரீ விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்த நடிகர் விஜய், இன்று வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றார். வெளிநாட்டில் அவர் ஒருசில நாட்கள் ஓய்வு எடுப்பார் என்றும் அதன் பின் சென்னை திரும்பும் விஜய், ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஒரு சமூக பிரச்சனைக்காக குரல் கொடுத்த விஜய், அதே பிரச்சனையை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

Leave a Reply