சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: அதிகாரிகளிடம் இருந்து வசூலித்து தர உத்தரவு

சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: அதிகாரிகளிடம் இருந்து வசூலித்து தர உத்தரவு

பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான சம்பவம் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சுபஸ்ரீ குடும்பத்தினர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் தரவேண்டும் என்றும், அந்த தொகையை அலட்சியமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பேனர் வைக்க மாட்டோம் என அறிவிப்பு விடுத்த கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply