இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் லாக்டவுன் முடிந்தவுடன் விரைவில் வெளிவரவிருப்பது நாம் அறிந்ததே.

தமிழில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றை கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நால்வர் இயக்கி வருகின்றனர்

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் வெப்சீரிஸ்ஸில் சாந்தனு மற்றும் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் காளிதாசன் திருநங்கை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அவருடைய கேரக்டர் மிக சிறப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திருநங்கையின் பாடி லாங்குவேஜ் மற்றும் மேனரிசத்திற்காக அவர் சிறப்பு பயிற்சி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

சுதா கொங்காரா பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply