சீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?

கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் முடிவடைந்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதியை வரும் செப்டம்பர் 6ஆம் தேதி அறிவிக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். அந்த தேதியில் தான் அவர் இயக்கிய இன்னொரு படமான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, வம்சி கிருஷ்ணா, உள்பட பலர் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

மேலும் கவுதம் மேனன் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம், ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply