சீமான் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றார்: விஜயலட்சுமி திடுக்கிடும் புகார்

சீமான் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றார்: விஜயலட்சுமி திடுக்கிடும் புகார்

சீமான் மீது பாலியல் புகார் கூறியதற்காக பலமுறை தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், தான் தப்பிபிழைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் குறித்து தனது முகநூல் வாயிலாக முகம் சிவந்த நிலையில் விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீமான் மீது பாலியல் புகார் தெரிவித்ததால் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாகவும் அதில் இருந்து தான் தப்பி பிழைத்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அத்துடன் தன்னை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடும் தம்பிகளை சீமானின் மவுத் பீஸ் என்று விஜயலெட்சுமி கலாய்த்துள்ளார்.

Leave a Reply