shadow

சீனா: ஒலியை விட அதிவேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி!

ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணை ஒன்றை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. டி எப் 26 (DF 26) என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.

3 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது.

தரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி எப் 26 ஏவுகணையை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *