சீனாவின் அத்துமீறல், அடாவடித்தனம் கண்டிக்கத்தக்கது:

ஹெச். ராஜா ட்வீட்

சீன ராணுவத்தின் தாக்குதலால் இந்திய வீரர்கள் 20 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வீரமரணமடைந்த இந்தியர்களுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சீனாவின் அடாவடித்தனம் அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமரணம் அடைந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு #வீரவணக்கம் செலுத்துகிறேன்.

ஹெச்.ராஜாவின் இந்த டுவீட் தற்போது இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply