shadow

சீட்டுக்கட்டு போல் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பு: 48 வீடுகள் இடிந்து தரைமட்டம்

ரஷியாவில் உள்ள செல்யாபின்ஸ்க் மாகாணத்தின் மாக்னிடோகோர்ஸ்க் என்ற நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 48 வீடுகள் இடிந்து தடைமட்டமானது

இந்த விபத்தில் முதல்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீட்புப்பணிகள் முடிவடைந்ததும் மொத்தம் 21 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply