சிவாஜி, கமல்ஹாசனை அடுத்து 9 வேடங்களில் ஜெயம் ரவி?

சிவாஜி, கமல்ஹாசனை அடுத்து 9 வேடங்களில் ஜெயம் ரவி?

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளிவந்த நிலையில் இந்த படத்தில் ஜெயம்ரவி 9 கேரக்டர்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் சற்றுமுன் இந்த படத்தின் மோஷன் போஸ்டரின் காட்சிகள் தெரிவிக்கின்றன

இந்த மோஷன் போஸ்டரில் ஜெயம்ரவியும் அவரது அருகில் எட்டு பேர்களும் இருப்பது போல் உள்ளது. எனவே ஜெயம் ரவி இந்த படத்தில் 9 கேரக்டர்களில் நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதியானால் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படங்களை அடுத்து அதிக கேரக்டர்களில் நடித்த தமிழ் நடிகர் என்ற பெருமையை ஜெயம் ரவி பெறுவார்

Leave a Reply