சிவாஜி அரசியலில் தோற்றவர் இல்லை: திருமாவளவன்

சிவாஜி அரசியலில் தோற்றவர் இல்லை: திருமாவளவன்

நடிகர்களின் அரசியல் குறித்து பேசும் அனைத்து தலைவர்களும் எம்ஜிஆர் அரசியலில் வென்றவர் என்றும், சிவாஜி அரசியலில் தோல்வி அடைந்தவர் என்றும் கூறுவதுண்டு. ஆனால் முதல்முறையாக அரசியலில் சிவாஜி தோற்றவர் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் பேச்சியுள்ளார்.

எதையாவது செய்து அரசியலில் வெல்ல வேண்டும் என்ற சுயநலமில்லாத காரணத்தால் சிவாஜி கணேசன் தேர்தலில் தோற்றார் என்றும், கொள்கை அடிப்படையிலும் தன்மானத்தின் அடிப்படையிலும் பார்த்தால் சிவாஜி அரசியலில் தோற்றவர் இல்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் ரஜினி, கமல் அரசியல் குறித்து கருத்து கூறிய திருமாவளவன், ‘அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற திரைப்பட கவர்ச்சி தேவை என்பதை ரஜினி, கமல் உணர்ந்துள்ளனர்’ என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply