சிவாஜியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணையும் பிரபு

சிவாஜியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணையும் பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பெருந்தலைவர் காமராஜரின் அபிமானி என்பதால் காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகள் இருந்தார். ஆனால் அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். 1989ஆம் ஆண்டு அவரது கட்சி 50 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன்பின் சிவாஜி அரசியலில் இருந்து விலகினார்

இந்த நிலையில் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாகவும் இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக பிரபுவின் அன்னை இல்லத்திற்கு வந்து சிவாஜி கணேசனின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து பிரபுவை கட்சியில் இணைத்துக் கொள்ள உள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சிவாஜியின் மகன் ராம்குமார் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, இதுவரை நம்ம கூட்டம் மற்றவர்களுக்கு வாழ்க’ போட்டே பழகிய கூட்டமாக இருந்தது. ஆனால் இனிமேல் நமக்கு நாமே ‘வாழ்க’ என்று கோஷமிடும் நல்ல நாள் விரைவில் வரும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply