பரபரப்பு தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய ஹீரோ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியது

ஆனால் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு போட்டதை அடுத்து இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது சன் டிவி இந்த பிரச்சனையை முடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி வரும் 24ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஹீரோ திரைப்படம் ஒளிபரப்பாகும் என தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது

ஜீரோ திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் சிக்கலால் பல கோடி நஷ்டம் என்ற நிலையில் தற்போது சன் டிவி இந்த பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளதால் சிவகார்த்திகேயன் தரப்பினர் நிம்மதி அடைந்துள்ளனர்

Leave a Reply