சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 16வது திரைப்படமான ‘எஸ்கே 16’ என்ற திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த படத்தின் டைட்டி ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

பாண்டிராஜ் இயக்கத்தில் டி.இமான் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Leave a Reply