சிவகார்த்திகேயனால் விழுந்த நயன்தாரா: தூக்கிவுட்ம் சிரஞ்சீவி

இந்த ஆண்டு நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் ரிலீஸ் ஆன ‘ஐரா’,’ மிஸ்டர் லோக்கல்’ மற்றும் ‘கொலையுதிர்க்காலம்’ ஆகிய திரைப்படங்கள் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த மிஸ்டர் லோக்கல்’ தோல்வி மட்டுமின்றி நயன்தாராவின் சூப்பர் ஸ்டார் இமேஜையும் காலி செய்தது

இந்த நிலையில் தற்போது நயன்தாரா நம்பியிருக்கும் ஒரே படம் ‘சயிர நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த இந்த படம் அவரை மீண்டும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா நடிக்கும் ‘தர்பார்’, விஜய்யுடன் நயன்தாரா நடிக்கும் ‘பிகில்’ படங்களும் அவருக்கு பெரிய புகழை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply