சில நிமிடங்களில் வெளியே வரும் சசிகலா! வாசலில் காத்திருக்கும் தினகரன்

சில நிமிடங்களில் வெளியே வரும் சசிகலா! வாசலில் காத்திருக்கும் தினகரன்

பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா இன்னும் சில நிமிடங்களில் பரோலில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் காத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கணவர் நடராஜன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பரோலில் வெளியே வருவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவிட்டதால் இன்னும் சில நிமிடங்களில் சசிகலா பரோலில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து குடகு விடுதியில் தங்கியிருந்தவர்களுடன் தினகரன் தற்போது பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறை வாசலில் சசிகலாவை வரவேற்க காத்திருப்பதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.