சென்னையில் உள்ள பைவ் எலிமெண்ட்ஸ் சிலம்பம் மற்றும் ஆர்ட்ஸ் அகாடெமி (Five Elements Silambam and arts academy) நடத்திய மாபெரும் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி 20 – 8 – 2020 அன்று நடைபெற்றது. இதில் அரியலூர்,செங்கல்பட்டு,சென்னை,கோவை,கள்ளக்குறிச்சி,கல்பாக்கம்,கிருஷ்ணகிரி,மதுரை,சேலம்,திருப்பத்தூர்,தூத்துக்குடி,திருச்சி,வேலூர்,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களும் மகாராஷ்டிரா,கேரளா,கர்நாடக,டெல்லி,ஆந்திரா,உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து இருந்து சுமார் 304 -க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, ஒரே நேரத்தில் சிலம்பக்கலையின் நுட்பங்களை செய்துகாட்டி, உலக சாதனை புரிந்தனர்.

இந்நிகழ்வு கலாம் வேர்ல்டு ரெகார்ட்ஸ் (Kalam world records) என்கிற புத்தகத்தில் உலக சாதனையாக இடம் பிடித்துள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்ற சிலம்ப வீரர், வீராங்கனைகளை ‘யுனைடெட் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் பெடரேஸன்’ பொதுச்செயலாளர் டாக்டர் JS.சத்தியராஜ் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்வை பைவ் எலிமெண்ட்ஸ் சிலம்பம் மற்றும் ஆர்ட்ஸ் அகாடெமியின்(Five Elements Silambam and arts academy) இயக்குநர் மாஸ்டர் M. பிரிட்டோ யுவராஜ் மற்றும் பயிற்சியாளர் R.அரவிந்தராஜ் ஆகியோர் இந்த உலக சாதனை நிகழ்வில் அமைப்பாளர்களாக விளங்கியுள்ளனர்.பங்கேற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும் தெரிவித்தனர்.

சென்னையிலேயே ஆன்லைன் மூலம் சிலம்பத்தில் சாதனை செய்தே முதல் அகாடமி என்ற பெயரை பைவ் எலிமெண்ட்ஸ் சிலம்பம் மற்றும் ஆர்ட்ஸ் அகாடெமி(Five Elements Silambam and arts academy) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply