சிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு..பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்

சிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் அடைக்கலம் தேடுகிறார்கள் என்றால், வழிபாட்டுத்தலங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் மாறிவிடும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு சம்பவம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘இலங்கை வெடிகுண்டு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பில் மரணம் அடைந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார்

Leave a Reply