சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு, சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

12-ம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு மே 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களிலும், 11ஆம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு மே 13 , 14 ஆகிய தேதிகளிலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்குச் சென்று தட்கல் மூலம் சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த விண்ணப்பங்களை பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து கூடுதல் விபரம் தெரிய வேண்டுமெனில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply