சிம்புவை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு? ரசிகர்கள் உற்சாகம்

சிம்புவை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு? ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடித்த படம் ஒன்றின் போஸ்டர் இணையதளங்களில் வெளியாகி பல மாதங்களாகி உள்ளதால் சிம்புவின் அடுத்த போஸ்டர் எப்போது வெளிவரும் என அவரது ரசிகர்கள் ஏங்கி காத்திருந்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் நடித்த ‘மஹா’ திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை, சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த போஸ்டரை சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் இணைய தளங்களில் பகிர்ந்து வருவதால் இந்த போஸ்டர் பார்த்தபோது அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply