சிம்புவின் அடுத்த படம் குறித்த அட்டகாசமான அறிவிப்பு

சிம்புவின் அடுத்த படம் குறித்த அட்டகாசமான அறிவிப்பு

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்டைலான வித்தியாசமான சிம்புவை திரையில் பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இதேபோல் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படமான மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் 16-ம் தேதியும் வரும் 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிம்பு நடித்த ஒஸ்தி திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்க திட்டமிடப்பட்டிருபப்தாகவும், பிரபல தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும்,முதல் பாகத்தை இயக்கிய தரணியே இந்த படத்தையும் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply