சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை!

சிபிஐ தலைமை அலுவலகத்தில் உள்ள தரைதளம் மற்றும் 4வது தள அலுவலகத்தில் வைத்து சிதம்பரத்திடம் விசாரணை சிபிஐ அதிகாரிகள் நடத்தப்பட்டதாகவும், அவர்களுடன் பொருளாதார குற்றப்பிரிவினர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்றும், சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதால், காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்தகட்ட செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply