சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல்: புதிய தற்காலிக இயக்குனர் நியமனம்

சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல்: புதிய தற்காலிக இயக்குனர் நியமனம்

கடந்த சில நாட்களாக நாட்டின் முன்னணி ஊடகங்கள் அனைத்திலும் வெளியான தலைப்பு செய்தி சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல் குறித்த செய்திதான் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர்ராவ் என்பவரை சிபிஐ தற்காலிக இயக்குனராக மத்திய அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையே நிலவிவரும் மோதலால் இந்த புதிய நியமனம் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ அமைப்பே ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததையொட்டியே இந்த ரெய்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply