சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலத்தில் 92.93% தேர்ச்சி

கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 974 மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

இந்த தேர்வு முடிவில் நாட்டிலேயே அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 98 புள்ளி 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை மண்டலத்தில் 92 புள்ளி 93 சதவீதம் பேரும் டெல்லி மண்டலத்தில் 91 புள்ளி 87 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாட்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 83 புள்ளி 4 சதவீதமாக உள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply