சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: தமிழிசை

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைதானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் மறுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீது தவறில்லை என்றால் விசாரணைக்கு ஆஜராகாமல் ப.சிதம்பரம் ஓடி ஓளிந்த‌து ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

சிதம்பரம் கைது சட்டப்படி நடந்ததாகவும், சிதம்பரம் மீது தவறு இல்லை எனில் அவர் சட்டப்படி வாதாடி விடுதலை பெறலாம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்

Leave a Reply