வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யாத நிலையில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த், நேற்று சிங்கப்பூர் சென்றுள்ளார். ஜி20 மாநாட்டிற்கு சென்றுவிட்டு சிங்கப்பூர் வந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், விஜயகாந்தும் நேற்று சந்தித்து தேர்தல் உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷை நரேந்திரமோடியின் தூதர் சென்னையில் சந்தித்து பேசியுள்ளார். இரு தேசிய கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கவுள்ள நிலையில் மற்ற கட்சிகள் இன்னும் கூட்டணியையே இறுதி செய்யாமல் உள்ளன. இந்நிலையில் வருகிற மார்ச் 5ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply