சிஏஏ போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த காமராஜரின் பேத்தி!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 6வது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு முன்னாள் முதல்வர் காமராஜரின் பேத்தி மயூரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நேற்றைய 5வது நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜரின் பேத்தி மயூரி போராட்டக்காரர்கள் மத்தியில் பேசியபோது, ‘குழந்தைகள் உள்பட அனைவரும் நடத்தி வரும் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும், அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply