சிஏஏவை எதிர்த்து மேலும் ஒரு மாநிலத்தில் தீர்மானம்: முதல்வர் அறிவிப்பு

சிஏஏவை எதிர்த்து மேலும் ஒரு மாநிலத்தில் தீர்மானம்: முதல்வர் அறிவிப்பு

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தெரிவித்து ஏற்கனவே கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது தெலுங்கானா சட்டமன்றத்திலும் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் இதுகுறித்து பல்வேறு மாநில முதல்வர்களிடமும் பேசியிருப்பதாக கூறிய முதல்வர் சந்திரசேகரராவ் தெலுங்கானா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் மட்டுமே சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply