‘சாஹோ’ ரிலீசால் தள்ளிப்போன ‘காப்பான்’

பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திடீரென ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸ் தேதியை ‘சாஹோ’ படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதனால் அதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த சூர்யாவின் காப்பான் திரைப்படம் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது

சூர்யாவின் காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

சூர்யா, சாயிஷா, மோகன்லால், பொமன் இரானி, சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்

Leave a Reply