சாலை வசதி இல்லாததால் படகில் சென்ற கர்ப்பிணி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கத்திமா என்ற பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

இங்குள்ள சாலைகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக இருப்பதால் அந்த பகுதி மக்கள் தங்கள் ஊரை மற்ற நகரத்துடன் இணைக்கும் சாலையை சீர்படுத்தி தருமாறு போராட்டம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்க, சாலை வசதி இல்லாததால் படகில் அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply