shadow

சாலை ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
JOBS
புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாலை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Technician (1)

காலியிடங்கள்: 06

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 55 சதவீத மதிப்பெண்களுடன் Draftsman (Civil) டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (1)

காலியிடங்கள்: 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 55 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

வயதுவரம்பு: 27.06.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant:

காலியிடங்கள்: 10

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant:

காலியிடங்கள்: 02

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, ஸ்கில்டு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தவும் பெண்கள், எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது..

விண்ணப்பிக்கும் முறை: www.crridom.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Controller of Administration,

CSIR – Central Road Research Institute,

(Council of Scientific & Industrial Research)

Delhi-Mathura Road, P.O. CRRI,

NEWDELHI- 110025.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2016.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.07.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crridom.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply