சார்பு ஆய்வாளர்: காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்

சார்பு ஆய்வாளர்: காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்

2019ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் தேர்வில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு, 11ம் தேதியிலிருந்து 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தவிர்த்து, பிற விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், தேர்வு மையத்தில் எழுத்து தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது

Leave a Reply