shadow

சாண்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற மறுத்த பிக்பாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனலுக்கு தகுதி பெற்ற நான்கு போட்டியாளர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூற கமலஹாசன் பாஸ் வீட்டுக்குள் சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சில நிமிடங்கள் அவர்களுடன் பேசிவிட்டு மீண்டும் தான் ஆடியன்ஸ் இருக்கும் பகுதிக்கு செல்லவிருப்பதாக கமல்ஹாசன் கூறியபோது, ‘நாங்கள் கூடவே வருகிறோம் என்று சாண்டி கூறினார்

அதை பிக்பாஸ் அனுமதிக்க மாட்டார் என்று கமல் கூறியபோது சாண்டி, ‘பிக்பாஸிடம் நான் சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். அப்போது திடீரென ஒலித்த பிக்பாஸ் குரல், சாண்டி அப்படியெல்லாம் நீங்கள் செல்ல முடியாது என்று கூறியதை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களிடம் விடை பெற்று கமல்ஹாசன் வெளியிடுகிறார். கமல்ஹாசன் கையை பிடித்து கொண்டே வெளியே செல்ல வேண்டும் என்ற சாண்டியின் கடைசி ஆசையை பிக்பாஸ் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *