சர்ச்சை பேச்சு எதிரொலி: ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அவரது தாயார் குறித்தும் திமுக எம்பி ஆ ராசா சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்

இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தற்போது அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

முதல்வர் குறித்தும் அவரது தாயார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்த புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இன்று மாலை 6 மணிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply