சம அளவில் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்: குலுக்கல் முறையில் தேர்வு!

சம அளவில் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்: குலுக்கல் முறையில் தேர்வு!

ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 2 வேட்பாளர்களும் சம வாக்குகள் பெற்றதால், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, பஞ்சவள்ளி, சரஸ்வதி ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டனர். நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இருவரும் சமமாக தலா 664 வாக்குகள் பெற்று இருந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கையிலும் சம அளவில் தான் இருந்தது.

இதனையடுத்து இருவரிடமும் கலந்து பேசிய மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளரை தேர்வு செய்ய இருவரிடமும் சம்மதம் பெற்றார். இந்த குலுக்கலில் சரஸ்வதி தேர்வுசெய்யப்பட்டதால் பஞ்சவள்ளி அதிருப்தி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply