சமூக விலகலை பின்பற்றாத பொதுமக்கள்

கொரோனா எப்படி அழியும்

கொரோனா வைரஸை ஒழிக்க ஒரே வழி ஊரடங்கு மற்றும் சமூக விலகல் என அனைத்து நாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தும் சமூக விலகலை சரியாக கடைபிடிக்காமல் பொது மக்கள் இருக்கின்றனர். எனவே கொரோனா எப்படி அழியும் என சமூக வலைதள பயனாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

மும்பையில் உள்ள Byculla என்ற பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் சமூக விலகலை பின்பற்றாமல் காய்கறி வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையில் நிற்கின்றனர். ஒருவருக்கொருவர் இடைவெளியில்லாமல் வரிசையில் நிற்பதால் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட அங்கு வரிசையில் நிற்கும் அனைவருக்கும் கொரோனா பரவி விடும் அபாயம் இருக்கிறது

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் உயிரைவிட காய்கறி முக்கியம் என வரிசையில் நிற்கும் பொது மக்களை நினைத்து என்ன சொல்வது என தெரியவில்லை என சமூக வலைதள பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா ஒழியும் வரை கண்டிப்பாக சமூகவிலகலை கடைபிடித்தே தீர வேண்டும் என்றும் இல்லையெனில் கொரோனா ஒழிய வாய்ப்பே இல்லை என்றும் அவர்களை எச்சரித்து வருகின்றனர்

Leave a Reply