சபரிமலை விவகாரம்: பந்தள மன்னரின் பேட்டியும் பினரயி விஜயனின் பதிலடியும்

சபரிமலை விவகாரம்: பந்தள மன்னரின் பேட்டியும் பினரயி விஜயனின் பதிலடியும்

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்புகளில் ஒன்று ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம்’ என்பதுதான்.

இந்த தீர்ப்புக்கு ஒருசில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், சில அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தும் உள்ள நிலையில் பந்தள மன்னர் இதுகுறித்து கூறியபோது, ‘“சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் சுகாதார சீர்கேடு உண்டாகும்; 41 நாட்கள் விரதமிருந்து பெண்கள் சபரிமலைக்கு வருவது சாத்தியமில்லை” என்று கூறினார். மேலும் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்வோம் என சிவசேனா கட்சியினர் மிரட்டி வருகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில், ‘சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்; சட்டம்-ஒழுங்கை கையில் எடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்

 

Leave a Reply