சபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம் தீர்ப்பு அளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதன்படி பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என்றும், தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோயில், மசூதி, தேவாலயம் என எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களது வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த மறுசீராய்வு மாற்றப்படுவதாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முடிவு காரணமாக 7 பேர் அமர்வுக்கு சபரிமலை வழக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply