சபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தாலும், ஒருசில சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சபரிமலையில் பெண்கள் இன்னும் சுதந்திரமாக வழிபட முடியாத நிலையே உள்ளது

இந்த நிலையில் இன்று கண்ணூரைச் சேர்த ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா என்ற இரண்டு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ந்தனர். 50 வயதுக்கு கீழ் உள்ள அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் போலீசார் அந்தப் பெண்களை தடுத்து நிறுத்தி, நிலக்கல் கன்ட்ரோல் ரூமுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply