சபரிமலையில் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

சபரிமலையில் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒன்றில் ‘சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அதிரடி தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தேவஸ்தான் கூறியிருக்கும் நிலையில் கேரள அரசு மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய போவதில்லை என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும் சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், பெண்கள் கோவிலுக்குள் செல்வதை வைத்து சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பினராயி தெரிவித்துள்ளார்.

Leave a Reply