சன்னிலியோனை தொடர்ந்து திரைப்படமாகும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு

சன்னிலியோனை தொடர்ந்து திரைப்படமாகும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு வெப்சீரீஸ்ஸாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ், மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாகவுள்ளது

ரிச்சா என்ற நடிகை ஷகிலா வேடத்தில் நடிக்கும் நிலையில் இந்த படத்தில் ஷகிலா சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த படம் ஷகிலா தற்போது வாழ்ந்து வரும் வீட்டை, சுற்றியுள்ள இடங்களில் படமாவதால் தத்ரூபமாக படம் உருவாகி வருவதாகவும், ரிச்சாவும் ‌ஷகிலாவுடன் நெருங்கிப் பழகி அவரது உடல்மொழி, பேசும் விதம் உள்ளிட்ட நுட்பமான வி‌ஷயங்களைக் கவனித்து தனது நடிப்பில் வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருவதாகவும் இவ்வருட இறுதியில் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த ஆண்டில் இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply