சந்திராயனை போல் மிதந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது: முக ஸ்டாலின்

சந்திராயனை போல் மிதந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது: முக ஸ்டாலின்

நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கீழடி பகுதிக்கு சென்று அங்குள்ள அகழ்வாராய்ச்சிகளை பார்வையிட்டார். இதனையடுத்து அவர் இதுகுறித்த அனுபவங்களை தற்போது தெரிவித்துள்ளார்.

கீழடியில் நின்றிருந்த போது மனதோ வியப்பிலும், பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயானை போல் பறந்து, உயர்ந்து சென்றது என்றும், கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும், செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும், பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம் என்றும், பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.