சந்திரபாபு நாயுடு கைதா? ஆந்திராவில் பெரும் பரபரப்பு!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட தெலுங்கு தேச கட்சியின் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பால்நாடு ஆகிய கிராமங்களில் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சியினர் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரபாபு நாயுடு உள்பட தெலுங்கு தேச கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பால்நாடு, நரசரபேட்டா, குஜாராலா உள்ளிட்ட இடங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு அக்கட்சியின் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply