சந்திரபாபு நாயுடுவின் போராட்டம்: ராகுல் காந்தி ஆதரவு

சந்திரபாபு நாயுடுவின் போராட்டம்: ராகுல் காந்தி ஆதரவு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்/

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால் கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சியுன் கைகோர்த்தது

இந்த நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் ராகுல்காந்தி நேரில் வந்து போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

Leave a Reply