சந்தானம் – கண்ணன் இணையும் படத்தின் பூஜை இன்று

ஹீரோவாக புரமோஷன் ஆனாலும் காமெடி கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2, ஏ1 ஆகிய வெற்றிகளை அடுத்து சந்தானம் தற்போது இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

சந்தானம் – கண்ணன் இணையும் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுவதாகவும் இந்த படத்தை வரும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சந்தானம் ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கும் இந்த படத்தில் சண்முகசுந்தரம், ஆர்கே செல்வா, ஸ்டண்ட் சில்வா, ராஜ்குமார் ஆகியோர் தொழில்நுட்ப பணி செய்யவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *